அரசியல்

கடந்த அரசாங்கத்தில் நிலவிய பல்வேறு பிரச்சினைகளால் புதிய பிரதமரை நியமித்தேன்

கடந்த அரசாங்கத்தில் நிலவிய பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, புதிய பிரதமரை தாம் நியமித்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இலங்கைக்கான வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இவர் இது குறித்து விளக்கமளிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பையும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்று வெளிநாட்டு ராஜதந்திரிகள் ஜனாதிபதியை கோரியுள்ளார்..

இருப்பினும், புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ள முறைமை, தமக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் யாப்பினை மீறாமல் அமைந்துள்ளது என ஜனாதிபதி தெளிவுப்படுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button