உலகம்செய்திகள்

கடந்த இரு மாதங்களின் பின்னர் குறைந்தளவில் கொரோனா தொற்றாளர்கள் பதிவு

இந்தியாவில் இதுவரை 25 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் முதன்முறையாக குறைந்தளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 70 ஆயிரத்து 421 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் மூவாயிரத்து 921 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இதுவரை 2 கோடியே 95 இலட்சத்து 10 ஆயிரத்து 410 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 3 இலட்சத்து 74 ஆயிரத்து 305 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் குணமடைந்துள்ள அதேவேளை, 09 இலட்சத்து 73 ஆயிரத்து 158 பேர் மாத்திரமே தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

Related Articles

Back to top button