செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் 743 பேர் கைது.!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 743 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாதிருத்தல், சமூக இடைவெளியை பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றாத குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் நபர்களை அடையாளம் காண சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

Related Articles

Back to top button