செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 755 பேர் கைது.!

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் இதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 18,057பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தற்போது பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com