செய்திகள்

கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் கப்பலினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான நட்ட ஈட்டு தொகை எவ்வளவு தெரியுமா.?

கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் கப்பலினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான நட்டஈட்டை செலுத்தும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக கப்பலின் உரிமையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

40 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈட்டை கோரியுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் விரைவில் நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேர்ள் கப்பலின் உரிமையாளர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே, கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதா என்பது தொடர்பில் நேற்று மீண்டும் கப்பல் மூழ்கிக் கொண்டிருக்கும் பகுதியை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இருந்து நீர் மாதிரிகள் பெறப்பட்டன.

நீர் மாதிரிகள் மீதான பரிசோதனைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட, பேர்ள் கப்பலின் கெப்டனுக்கு பிணை வழங்கப்பட்டது. இருபது இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Related Articles

Back to top button