செய்திகள்

கடலில் மூழ்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்

ஆழ்கடலுக்கு கொண்டு செல்லப்படும் தீப்பிடித்த MV X-Press Pearl கப்பலின் பின் புறத்தில் காணப்படும் நீர்க்கசிவு காரணமாக அது நீரில் மூழ்கி வருவதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று தொடக்கம் கப்பலில் நீர் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கப்பல் இதுவரையில் 50 சதவீதம் கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த கடலில் தீ விபத்துக்கு உள்ளான ´எக்ஸ்பிரஸ் பர்ல்´ கப்பலை ஆழ் கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி இருந்தார்.

அதற்கமைய, மீட்பு நிறுவனத்தின் டக் இயந்திரம் ஊடாக கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் நைட்ரையிட் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Image
Image
ImageImage

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com