செய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத்திற்காக விசேட வேலைத்திட்டம்.!

கடவுச்சீட்டு விநியோகத்திற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், பத்தரமுல்ல தலைமை அலுவலகம் மற்றும் மாத்தறை, வவுனியா, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவானோருக்கு மாத்திரமே சேவைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய தேவையைக் கொண்டவர்கள் மட்டுமே தமக்கு அருகிலுள்ள அலுவலகத்திலிருந்து பெற முடியும் என்பதுடன், அவர்கள் முன்கூட்டியே தொலைபேசி அழைப்பின் ஊடாக திகதியை முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவையன்றி திணைக்கள வளாகத்தில் எவரும் நுழைய அனுமதி வழங்கப்படாது என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரையே அழைப்பை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல பிரதான காரியாலயம் 070 7101060 / 070 7101070

பிராந்திய அலுவலகங்களின் தொடர்பு எண்கள்

மாத்தறை -041 -5412212 / 041-5104444

கண்டி -081-5624509 / 081-5624470

வவுனியா – 0255676344 / 025-5676345

குருநாகல் – 037-5550562 / 0375550563

Related Articles

Back to top button