கல்விசெய்திகள்நுவரெலியாமலையகம்

கடுமையாக மாணவனை தாக்கிய ஆசிரியர் – மாணவன் வைத்தியசாலையில்.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் சென் போஸ்கோ கல்லூரியின் சிங்கள மொழியில் தரம் 3 இல் கல்வி பயின்று வந்த மாணவன் ஒருவரை கடுமையாக ஆசிரியர் ஒருவர் தாக்கியமை தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவன் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த மாணவனின் வகுப்பாசிரியர் பென்சில் ஒன்றை களவாடிய சம்பவம் தொடர்பில் குறித்த மாணவனை தடியால் கடுமையாக தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் பாடசாலைக்கு செல்ல முடியாது என பெற்றோரிடம் வழியுறுத்தி வீட்டில் உணவு உண்ணால் சோகநிலையில் இருந்ததை இனங்கண்ட மாணவனின் தந்தை என்ன நடந்தது என கோறியபோது நடந்த சம்பவத்தை மாணவன் தனது தந்தையிடம் கூறியுள்ளான்.

சிறுவனின் ஆடையினை கழற்றி சோதனையிட்ட போது மாணவனின் உடம்பு பகுதி, கை மற்றும் கால் பகுதிகளில் பாரிய காயங்கள் இருப்பதை கண்ட பெற்றோர் நேற்று (15) இரவு ஆசிரியருக்கு எதிராக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகிய மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Related Articles

Back to top button