மலையகம்
கடும் மழையால் ஹட்டனில் போக்குவரத்து பாதிப்பு
ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, வட்டவளை, மஸ்கெலியா, தலவாக்கலை ஆகிய பகுதிகளில் இன்று பிற்பகல் பெய்த கடும் மழை பெய்தது.
கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், ஹட்டன் நகரப்பகுதியில் சில வீதிகள் நீரில் முழ்கியுள்ளன.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியுள்ள நிலையில், நீர் விதியூடாக வெளியேறி வீபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
.ஹட்டன் -கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதுடன், வீதி வழுக்கும் தன்மையாக உள்ளதால், வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களில் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.