மலையகம்

கடும் வறட்சியில் மலையகம் :100 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயத்தின் சிற்பங்களின் நிலை

கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவி வருகின்ற நிலையில், மவுசாகலை, காசல்ரீ, கென்யன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய, மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது.

மவுசாகலை நீர் தேக்கத்தின்நீர்மட்டமானது 66 அடியாகவும் காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர்மட்டம் 48 அடியால் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்  மட்டம் 34 அடியாகவும் குறைவடைந்துள்ளன.

இதனால், மின் உற்பத்தி செய்யும் அளவு குறைவடைந்துள்ளதுடன், இந்த நீர்த்தேக்கங்களில் நீர் வற்றுவதை தொடர்ந்தும் இதனுள் மூழ்கியிருந்த வழிபாட்டிடங்கள் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளன.

மவுச்சாக்கல நீர்த்தேக்கத்தில் மூழ்கிய சண்முகநாதன் ஆலயத்தின் சிற்பங்கள் 100 வருடங்களிற்கு மேலாகியும், இன்னும் நல்ல நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மேலும் நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளதுடன்,  வறட்சியான காலநிலை தொடர வாய்ப்புக்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், காடுகளுக்கு தீ வைப்பதனால் நீரேந்தும் பகுதியை அண்டிய ஏனைய பிரதேசங்களிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தினால் உடல் நலக் குறைபாடுகளும் ஏற்படுவதாகவும் ஆகையால் அதிகரித்த வெயில் நேரங்களில் வெளியில் செல்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com