செய்திகள்
கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும்: குழந்தைகள், சிறுவர்கள் குறித்து மிகவும் அவதானம்

வடமேல் மாகாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதப்புரம், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய பகுதியில் இன்று கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
வெப்பமான வானிலை நிலவுகின்றபோது பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும்.
குறிப்பாக, அதிகமான நீரை அருந்த வேண்டும் என்றும், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.