அரசியல்செய்திகள்

கட்சிக்கும் சிவாஜிலிங்கதிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை – செல்வம்.

ஐனாதிபதித் தேர்தலில் எங்கள் கட்சியின் உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் முடிவை கட்சி எடுக்கவும் இல்லை என்றும் அவரது முடிவிற்கும் எங்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்து ஐனாதிபதித் தேர்தலில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் இரண்டாம் சுற்றுச் சந்திப்பு யாழில் நேற்று நடைபெற்றது.

இச்சந்திப்பின் முடிவில் ஊடகவியியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனக்கு எதிராக கட்சி எடுக்கும் எந்த நடவடிக்கைகயையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button