உலகம்

கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் விடுதலை

புனித ரமழானை முன்னிட்டு கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கட்டாரில் தொழில் புரிந்து வந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு சட்டவிரோத செயல்களுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கே அரச விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த அபராதமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கட்டாரில் ரமழானை முன்னிட்டு, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல நாடுகளின் பிரஜைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் விடுதலைக்காக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கட்டார் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button