கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் மூடப்படும்

புதிய களனி பாலம் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் பேலியகொட சுற்றுவட்டத்திற்கு அருகில் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்கும் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் னெ தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதி இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில் சாரதிகள் மாற்று வழியினை பயன்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள அதிவேக வீதிக்கான நுழைவாயிலில் கட்டுநாயக்க அதிவேக வீதிக்குள் பிரவேசிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கண்டி பிரதான வீதியின் தொரண சந்தியில் அமைந்துள்ள நுழைவாயிலின் ஊடாகவும் பிரவேசிக்க முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.