கல்விநிகழ்வுகள்மலையகம்

கணபதி தமிழ் மகா வித்தியால யத்தின் வருடாந்த பழைய மாணவர் சங்க கூட்டம்

கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பழைய மாணவர் சங்க கூட்டமானது 16.04.2021 அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டமானது பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றதோடு இதில் சங்கத்தின் செயலாளர், பொருளாளர், உப தலைவர், ஆலோசகர், கண்காய்வாளர், பிரதேச ஒருங்கிணைப்பாளர் மற்றும் பல சங்க உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

இதன் போது பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு செயலாளரினால் பழைய மாணவர் சங்க யாப்பு முன்மொழியப்பட்டு சங்க உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இக் கலந்துரையாடலில் நோட்டன், ஆத்தடி ,ஐம்பது ஏக்கர், தண்டுகலா, ஒஸ்போன், பம்பரக்கல, மிட்போட், முருத்தன்னை, ஹெடிட் மற்றும் அக்கரத்தோட்டம் போன்ற பிரதேசங்களில் இருந்து உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

கடந்த ஒரு வருடமாக பலவேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இயங்கி வந்த எமது பழைய மாணவர் சங்கமானது இவ் வருடமும் பல புதிய திட்டங்களுடன் பயணிக்கு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com