...
செய்திகள்நுவரெலியா

கணவனை அடித்து கொலை செய்த மனைவி; நுவரெலியாவில் சம்பவம்!

நுவரெலியா, பீட்ரு பகுதியில் மனைவியால் கணவன் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கணவன், மனைவி இடையே நேற்றிரவு ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்தே இக்கொலை இடம்பெற்றுள்ளது.

3 பிள்ளைகளின் தந்தையொருவரே (வயது – 44) இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மனைவிக்கும் பிரிதொரு நபருக்கும் கள்ள உறவு இருந்து வந்துள்ளது. இந்த விடயம் தெரியவர, அது தொடர்பில் மனைவியிடம், கணவர் வினவியுள்ளார். இதன்போது இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி, அவரை பொல்லால் கடுமையாக தாக்கி கொன்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

டி.சந்ரு செ.திவாகரன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen