செய்திகள்

கண்டியிலிருந்து கோட்டை வரை புதிய புகையிரத சேவை.

கண்டி தொடக்கம் கொழும்பு கோட்டை வரையிலான புதிய புகையிரதம் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் புதிய புகையிரதம் , கண்டியிலிருந்து அதிகாலை 4.30க்கு கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த புகையிரதம் கொழும்பு கோட்டையிலிருந்து மாலை 5.20 க்கு கண்டி நோக்கி செல்லவுள்ளது.

இதேவேளை 8 புதிய புகையிரத எஞ்சின்கள் அடுத்த மாதமளவில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

அவற்றில் 06 எஞ்சின்கள் சீனாவிலிருந்தும் 02 எஞ்சின்கள் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download