அரசியல்

கண்டியில் எம்.ஜி.ஆருக்கு சிலை அமைக்க கோரிக்கை

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான  கண்டியில் அவருக்கு நினைவகம் மற்றும் சிலை அமைக்கமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேண்டுகோளை   எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா  கண்டியில் கொண்டாடப்பட்டுள்ளதுடன், நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூர்யா, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுப்பிள்ளை ராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில்  உள்ள அலரி மாளிகையில் வைத்து எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் சந்தித்துள்ளார்.

இதன்போது, எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் தெரிவிக்கையில்,

கண்டியில் எம்.ஜி.ஆர். நினைவகம் மற்றும் திருவுருவசிலை அமைக்க வேண்டும். இதனால் 2 நாடுகளுக்கு இடையே அதிக நல்லுறவு வளரும்.

இங்கு இலட்சக்கணக்கில் தமிழக சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கண்டி எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு புனித தலமாக மாறும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரணில் விக்ரமசிங்க,  திரையுலகிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தார். அத்துடன், குமாரின் வேண்டுகோளை பரிசீலிப்பதாக  தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com