செய்திகள்மலையகம்

கண்டியில் ஒரு பகுதி முடக்கம் : நுவரெலியாவில் விடுவிப்பு.!

இன்று காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் ​கண்டி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த கடுகஸ்தொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாகரதெனிய வத்த பிரதேசம் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரமன தெற்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button