கண்டிசெய்திகள்மலையகம்

கண்டியில் தடுப்பூசி ஏற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை இன்று

கண்டி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் இரண்டாம் கட்ட தடுப்பூசித் திட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட நிபுணர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார்.

இத்திட்டத்திற்காக கண்டி மாநகர சபை பிரதேசத்தில் 6 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரவித்தார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்து 4 நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இம்முறை கண்டி மாநகர சபை, பஸ்பாகே-கோரளை, பாத்த-தும்பர ஆகிய சுகாதார மருத்துவ உத்தியோத்தர் பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறும்.

இதேவேளை, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாகவும் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

முதற்கட்ட தடுப்பூசித் திட்டத்தின்கீழ் குண்டசாலை, மெனிக்ஹின்ன சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரிவுகளிலும், கண்டி மாநகரில் தொற்று அபாயம் தீவிரமாகவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஸ்புட்னிக்-வீ தடுப்பூசி ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button