செய்திகள்மலையகம்

கண்டியில் 9,730, நுவரெலியாவில் 4,275, மாத்தளையில் 3,717 பேருக்கு கொரோனா.!

மத்திய மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 17 ஆயிரத்து 722 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதற்கமைய கண்டி மாவட்டத்தில் 9,730 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 4,275 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 3,717 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 77 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 78 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 61 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இதற்கிடையில் மலையகத்தில் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால், சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு பொது மக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com