மலையகம்

கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் 187 வருட நினைவு நாள் மற்றும் குரு பூஜை

 

கண்ணுசாமி என்ற இயற் பெயரைக் கொண்ட இலங்கையில் கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1780 – ஜனவரி 30, 1832) அவருடைய நினைவு நாள் மற்றும் குரு பூஜை விழா இவ்வருடமும் இடம் பெறவிருப்பதாக தமிழ்நாட்டில் உள்ள மன்னனுடைய குடும்ப வாரிசுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் கண்டியை ஆட்சி செய்த காலப்பகுதியில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றிய பிரித்தானியர்,முதலில் கண்டி அரசில் தலையிடவில்லை. ஆனால், பிலிமத்தலாவையோ பிரித்தானியருடன் இணைந்து செய்த சதியின் காரணமாக இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட மன்னன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் சிறை பிடிக்கப்பட்டு தென்னிந்தியாவில் உள்ள வேலூர்க் கோட்டைக்கு அனுப்பப்பட்டு அங்கே பிரித்தானியரால் கொடுக்கப்பட்ட சிறிதளவு பணத்தில் இரு மனைவியருடன் வாழும் நிலை ஏற்பட்டு, 1832 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் காலமானார்.

எனினும் அவருடைய பரம்பரையை சேர்ந்த உறவுகள் வருடா வருடம் நினைவு நாள், மற்றும் குரு பூஜை விழாக்களில் ஈடுபடுவது வழக்கம் அவ்வகையில் இவ்வருடமும் நினைவு நாள் மற்றும் குரு பூஜை எதிர்வரும் 30.01.2018 அன்று மாலை 04 மணிக்கு தமிழ் நாட்டின் வேலூரில் உள்ள புது பஸ் நிலையப்பகுதியில் உள்ள முத்து மண்டபத்தில் இடம்பெறவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button