மலையகம்
கண்டி அசாதாரண சூழ்நிலைக்கு காரணமான பிரதான சூத்திரதாரி கைது
கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சூத்திரதாரியோடு 9 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கருத்து தெரிவித்துள்ளார்.
கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 12 மணித்தியாலத்திற்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை இன்று முற்பகல் 10 மணிக்கு தளர்த்தப்பட்டது.பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களின் வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு இன்று காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.