Breaking Newsகண்டிசெய்திகள்

கண்டி-உடனடியாக பெற்றோல் வழங்குமாறு கோரி சாரதிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டம்

கோகுல்

உடனடியாக பெற்றோல் வழங்குமாறு கோரி சாரதிகள் குழுவொன்று கண்டி-கொழும்பு வீதியை கெட்டம்பே பகுதியில் மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கெட்டம்பே I O C எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்த போதிலும் அவற்றை விநியோகிக்க எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தெரிவித்தனர்.

எரிபொருள் நிரப்ப முடியாது என எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தால் மூன்று நாட்கள் வரிசையில் நிற்காமல் வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும் என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

பல மணித்தியாலங்களாக வீதி மூடப்பட்டிருந்த நிலையில் பொலிசார்  எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்திடம் வினவியபோது, ​​இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சேவைக்கு பணம் செலுத்தாததால் பெற்றோல் பௌசர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வராது என தெரிவித்திருந்தனர்.

Related Articles

Back to top button