கண்டி ஹந்தானை 03ம் கட்டை தோட்ட தொழிலாளர்களுக்கு வீடு வழங்குவதாக குறிப்பிட்டு, காடுகளாக
இருந்த தோட்டங்களை துப்பரவு செய்ய தோட்ட முகாமைத்துவம் கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளது .அதன் அடிப்படையில் காடுகளாக இருந்த தோட்ட பகுதியை மக்கள் எல்லோரு துப்பரவு செய்திருக்கின்றார்கள்.
எனினும் 01ம் திகதி மக்கள் தங்களுக்கு வீடு கிடைக்கபோகின்றது என்ற மகிழ்ச்சியுடன் மேடைகள் அமைத்து கொண்டாட்டத்தில் இருந்துள்ளதோடு சிலஅரச அதிகாரிகளும் அங்கு வந்ததாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் தொடர்ந்து வந்த நாட்களில் வீட்டு உரிமம் வழங்குவதாக குறிப்பிட்டு மக்களை அங்கும் இங்கும் வரவழைத்து விரக்தி நிலையில் வைதத்து மட்டுமல்லாமல் .
இன்று மதியம்(05.07/2018) மக்களை சந்தித்த தோட்ட முகாமை இங்கு யாருக்கும் இடம் இல்லை என்று சொல்லியும்,இந்த தோட்டம் இப்பொழுது விற்பனை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளதாகவும், மக்கள் தற்போது வீதியோரத்தில் தமிழ் அமைச்சர ஒருவர் வருகைக்காக காத்திருப்பாதகவும் தெரிவிக்கப்டுகின்றது.