செய்திகள்

கண்டி – கலஹாவில் மீண்டும் பதற்றம்

கண்டி – கலஹா வைத்தியசாலையில் நிலவும் பதற்ற நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர விசேட அதிரடி படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கண்டி, கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை ஒன்றரை வயதான சங்கர் சஜீவன் என்ற ஆண் குழந்தை சுகயீனம் காரணமாக கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இரண்டு மணி நேரம் கடந்தும் வைத்தியர்கள் உரிய முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தால் பெற்றோர் முச்சக்கர வண்டியொன்றில் குழந்தையை பேராதெனிய வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர்.

இருப்பினும் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் வைத்தியர்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த குழந்தைக்கு சிகிச்சை வழங்கிக் கொண்டிருக்கும் போதே குழந்தை உயிரிழந்ததாக வைத்தியசாலை தாதி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனால் கோபமடைந்த பிரதேசவாசிகள் வைத்தியசாலையையும் வைத்தியர்களின் வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நிலைமையை இதுவரையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாதுள்ளதுடன் வைத்தியர்கள் உரிய முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தால் தான் குழந்தை உயிரிழந்ததாக பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கடிதம் ஒன்றை காண்பித்து குறித்த வைத்தியரை கண்டி மாகாண சுகாதார திணைக்களத்திற்கு இடம்மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத பிரதேசவாசிகள் வைத்தியரை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்தும் பதற்ற நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button