கலஹா வைத்தியசாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கண்டி நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 28ஆம் திகதி கலஹா வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று, பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவத்தையடுத்து, ஆத்திரமுற்ற பிரதேச மக்கள், வைத்தியசாலை வளாகத்தைச் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், வைத்தியசாலையின் கட்டிடம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட 7 பேரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.