கண்டிவிளையாட்டு

கண்டி கிரிக்கர்ட் அணியின் டிலுக்ஸன் 28 பந்துகளில் 99 ஓட்டங்கள்

308 ஓட்டங்களில் வெற்றி

கண்டி கிரிகர்ட் அகாடமிக்கும் பேர்வேர்ட்ஸ் கல்லூரிக்கும் இடையில் கடந்த 31/07/22 அன்று தெல்தெனிய தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற 50 ஓவர் கொண்ட போட்டியில் கண்டி கிரிகர்ட் அணி 308 ஓட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி கிரிகர்ட் அகாடமி 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 427 ஓட்டங்களை பெற்றது. இதில் டிலுக்ஸன் 28 பந்துகளில் 99 ஓட்டங்களை ஆட்டமிளகாமல் பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் பேர்வேர்ட்ஸ் கல்லூரி அணியின் ராகுல் மற்றும் ரவிந்து தலா இவ்விரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பேர்வேர்ட்ஸ் கல்லூரி அணி 18.1 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது அதிக பட்சமாக விஹானக 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.கண்டி கிரிகர்ட் அகாடமி அணி சார்பாக பந்துவீசிய சந்துரு 4 விக்கட்டுகளையும் ,துலார 3 விக்கட்டுகளையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button