அரசியல்

கண்டி தோட்ட பகுதி மக்களுக்கு காணி உறுதி பத்திரம் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளும் இறுதி கட்டத்திலுள்ளது-பரத் அருள்சாமி

(க.கிஷாந்தன்)

கண்டி மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்துக் கொண்டு செய்ய முடியாததை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையின் கீழ் இன்று நாங்கள் முன்னெடுத்து வந்துள்ளோம் இதனடிப்படையில், 1100 இந்திய வீடமைப்பு திட்டங்களும் 100 அமைச்சு வீடமைப்பு திட்டங்களும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 30 மில்லியனுக்கு அதிகமான தொகை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 100 நாட்களுக்குள் 1000 காணி உறுதி பத்திரம் என்ற வேலைத்திட்டத்துக்கு அமைவாக 800 இற்கும் அதிகமான கண்டி மாவட்டத்திலுள்ள தோட்ட பகுதி மக்களுக்கு காணி உறுதி பத்திரம் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளும் இறுதி கட்டத்திலுள்ளது.

இதேவேளை, பாதை புனரமைப்பு, நீர் வளங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி துறை அபிவிருத்திகள் போன்ற பல திட்டங்களையும் நாங்கள் ஆரம்பித்துள்ளோம். இந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கடந்த 5 வருட காலப்பகுதியில் எதனையும் செய்யாது இறுதி ஒரு வருடத்தில் சில சில அப்போதைய அரசாங்கம் செய்த சிறு அபிவிருத்திகளை செய்துவிட்டு, நாங்கள் கண்டிக்கு பாரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக தம்பட்டம் அடித்ததை மக்கள் மறக்கவில்லை.

எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் கட்டிய கட்டிடங்களை தானே கட்டியதாக தப்படிப்பது போன்று நாங்கள் வக்குரோத்து அரசியலை நாம் முன்னெடுப்பது கிடையாது. கடந்த காலங்களில் இந்திய வீடமைப்பு திட்டங்களில் பாதை, நீர் போன்றவற்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனக் கூறி இந்திய அரசாங்கம் வீடுகளை கட்டிக் கொடுத்திருந்தாலும் அப்போதிருந்தோரின் இயலாமையினால் வீடுகள் மட்டும் கட்டப்பட்டிருந்தாலும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை அதனையும் நாமே எம் அமைச்சு நிதியில் அமைக்கின்றோம் எனினும், நாங்கள் எங்களுடைய மக்களுக்கு காணி உறுதி பத்திரம் வேண்டும் என்ற இலக்குடனேயே பயணிக்கின்றோம் அதனை வழங்கியும் உள்ளோம். இவர்களை போன்று மக்களுக்கு போலி காணியுரிமை கொடுத்து ஏமாற்றவில்லை.

மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் எங்களுக்கு குடியுரிமை அந்தஸ்தத்தையும் ஆறுமுகன் தொண்டமான் எங்களுக்கான அரசியல் உரிமையை பெற்றுக் கொடுத்தனர். தற்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தலைமையில் எம் மக்களுக்கான காணி உறுதி பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு செயற்படுகின்றோம்.
மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாங்கள் செயற்படுகின்றோம்.

இவர்கபோன்று பழைய குப்பைகளை தோண்டினால் இவர்கள் இன்று இங்கிருக்க முடியாது. முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் பல ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டது அவருடைய கண்ணுக்கு தெரியவில்லை. பன்வில கெலாபொக்க பகுதியில் அபபோதைய அரசாங்க உறுப்பினருக்கு காணி வழங்கியது அவருடைய கண்ணுக்கு தெரியவில்லை. இவற்றை பாதுகாப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினரான எவ்வித நடவடிக்கை எடுக்காது போன்று அவருடைய கட்சியும் கொழும்பு வாழ் மக்களுக்கு துரோகம் இழைத்தது போன்று கண்டி வாழ் மக்களுக்கும் துரோக இழைக்கப்பட்டமையினாலேயே கண்டி மாவட்டத்திலுள்ள 24 ஆயிரம் மக்கள் ஆளும் கட்சியில் எமக்கு வாக்களித்தனர்.

இளைய தலைமுறையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் எங்களுடைய மக்களுக்கு நிலைபேண்தகு அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கே செயற்படுகின்றோம். அபிவிருத்தி என்ற பெயரில் சிறு தொகை பணத்தைக் கொண்டு அரசியல் செய்யும் வக்குரோத்து அரசியலை முன்னெடுப்பதற்கான தேவை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் கிடையாது.

நல்லாட்சியில் வக்குரோத்து அரசியலைக் கொண்டு நாட்டை மட்டுமல்லாது கண்டிவாழ் மக்களுக்கும் துரோகமிழைத்த பெருமைய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கும் அவருடைய தலைமைக்குமே சாரும். எங்களுடைய பயணங்கள் முன்னோக்கிய பயணமாகவே அமையும். அவர்களுடைய அரசியல் பின்னடைவு ஏற்பட்டமையினாலேயே இளைய தலைமுறையினரான நாங்கள் அரசியலை முன்னெடுத்துச் செல்ல மக்கள் எங்களுக்கு பலத்தை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

தேர்தலின் பின் இன்றுவரை கண்டி மக்களுக்கு நாம் பல சேவைகளை செய்துவருகின்றோம்.
விமர்சனம் செய்து அரசியல் பிழைப்பு நடத்தாது வாக்களித்த மக்களுக்கு சேவை செய்க என்றார்..

Related Articles

Back to top button
image download