கண்டிகாலநிலைசெய்திகள்நுவரெலியா

கண்டி, நுவரெலியாவில் 75 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகலாம்..!

மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றுத் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்குதல் அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் வலிமண்டல திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, பலத்த மழையினால், அத்தனகலு ஓயஅ களு, நில்வளா, களனி, மற்றும் கிங் ஆகிய கங்கைகளில் அதிகரித்த நீர் மட்டம் தற்போது குறைவடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com