கண்டிசெய்திகள்நுவரெலியாமலையகம்

கண்டி, நுவரெலியா, யாழில் சில பகுதிகள் முடக்கம்.!

நாட்டில் மேலும் 03 மாவட்டங்களில் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்சினன் கிராம சேவகர் பிரிவில் மத்திய பகுதியும், கண்டி மாவட்டத்தில் சுதும்பொல மேற்கு கிராம சேவகர் பிரிவில் வெலமெத பாரகம பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காரை நகர் கிராம சேவகர் பிரிவில் கல்லித்தெரு பகுதியும், கல்வன் தால்வு பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button