...
செய்திகள்

கண்டி- புசல்லாவ-அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில் ..

மலைவளம் நிறைந்த நன்னகர் அமர்ந்த கதிர்வேலா 
வளம்மிகு வாழ்வை நாம் பெற நீயும் அருள்வாயே
நல்லவர் நட்புடன் மனம் மகிழ்ந்துயரவே
உரியதை அளித்து உயர்வினைத் தந்திட வருவாயே
கிட்டிவரும் பகை எட்டியே விலக்கிடும் கதிர்வேலா 
கொட்டமதையடக்கி நல்வழி காட்டி அருள்வாயே
பலம் கொண்டு நாமும் வளம் பெற்று உயரவே
ஏற்றவை தந்து உயர்வினைத் தந்திட வருவாயே
கண்டி மாவட்டத்திருந்தருள் செய்யும் கதிர்வேலா 
கவலைகள் நீக்கி நிம்மதி நிலைக்க அருள்வாயே
அறிவு நிலைக்க வளம்பெற வாழ
கேட்டவை தந்து உயர்வினைத் தந்திட வருவாயே
புசல்லாவ நகரிருந்து வளம் வழங்கும் கதிர்வேலா 
மகிழ்வு நிறை வாழ்வைப் பெற அருள்வாயே
தரணியிலே ஏற்றமுடன் நாம் வாழ
வழியமைத்து உயர்வினைத் தந்திட வருவாயே
குன்று தோறும் குடிகொள்ளும் கதிர்வேலா 
குவலயத்தில் வளம் பெற்று நிலைபெறவே அருள்வாயே
நேர்மையுடன் நாம் வாழ்ந்து வளவாழ்வைப் பெற்றுவிட
துணையிருந்து உயர்வினைத் தந்திட வருவாயே
வள்ளி தெய்வானை அன்னையரை அருகு கொண்ட கதிர்வேலா 
வலிமை கொண்ட வாழ்வை அடைய அருள்வாயே
தெளிவுடைய வாழ்வை நாம் பெற்று உய்ய
திருமால் மருமகனே துணையாயிருந்து உயர்வினைத் தந்திட வருவாயே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen