செய்திகள்

கண்டி- பேராதனை அருள்மிகு  திருக்கோயில் 

மலையகத்தின் தலைநகரில் கோயில் கொண்ட குமரா 
மன இருளைப் போக்கி நல்லவழி காட்டிடய்யா
செந்தமிழும், நம்மினமும் தரணியிலே தலைநிமிர
தவறாது அருளிடய்யா குன்றிலுறை குமரேசா
பல்கலைகள் கற்பிக்கும் அகம் அருகு குடிகொண்ட குமரா
பற்றியுந்தன் அடிபணிவோர் வெற்றிநடை போட்டிடவும்
துணிவுடனே முன்செல்ல வழியை நீ செய்யவும் 
தூயதமிழ்க் காவலனே அருளிடையா குன்றிலுறை குமரேசா
சூரனின் ஆணவத்தை அடக்கியருள் செய்தவனே குமரா
சூழவரும் துன்பங்களைத் துடைத்தெறிந்திடவும்
தமிழ்மொழியின் பெருமையினை உலகறியச் செய்திடவும்
வேல்தாங்கி வினையகற்றும் தூயவனே அருளிடையா குன்றிலுறை குமரேசா
வேடுவன் திருமகளை மணந்தவனே குமரா
அச்சமில்லா நிம்மதியை நாளும் நாம் பெற்றிடவே
வள்ளலே நீயே ஏற்றவழி காட்டி
வளப்படுத்தி காத்து அருளளிப்பாய் குன்றிலுறை குமரேசா
கண்டி மாநிலத்தில் அமர்ந்திட்டவனே குமரா
அண்டிவரும் அடியார் குறை போக்கிடவே
என்றும் உன் துணை எமக்கு வேண்டுமன்றோ
தந்து வளம் பெருக்கிடவே அருளளிப்பாய் குன்றிலுறை குமரேசா
பேராதனை நன்நகரில் நிலைபெற்ற திருக்குமரா
ஆகாத கொடுபகைமை இல்லாதொழித்து விட்டு
மாறாத நிம்மதியை நாமடையச் செய்துவிடு
அன்னையுமை இளமகனே அருளிடுவாய் குன்றிலுறை குமரேசா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button