...
செய்திகள்

கண்டி- மகியாவ- அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

கண்டி மாநகரிருந்தருளும் எங்கள் முத்துமாரியம்மா
கலக்கமின்றி நாம் வாழ எமக்குத்துணை  நீயிரம்மா
கொடுமனது கொண்டவர்கள் கொட்டத்தை அடக்கிவிட்டு 
நிம்மதியாய் நாம் வாழ ஏற்ற வழி திறந்திடம்மா
மகியாவ நல்லிடத்தில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
மதிதனிலே நல்லறிவு மலர வழி செய்திடம்மா
மனதினிலே வலிமை தந்து எழுச்சியுடன் வாழவிட்டு
மகிழ்வுடனே நாம் வாழ ஏற்றவழி திறந்திடம்மா
கல்விச் செல்வம் வழங்குமிடம் அருகு கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
கவின் கலைகள் செழித்திடவே உரியவழி காட்டிடம்மா
மனம் மகிழும் வாழ்க்கை நிலை நாமடைய வழிவிட்டு 
வலிமை கொண்டு வாழ்வதற்கு ஏற்றவழி திறந்திடம்மா
மலை சூழ்ந்த பெருநகரில் வீற்றருளும் எங்கள் முத்துமாரியம்மா
மலைத்து நிற்கும் தடுமாற்றம் இல்லாது ஆக்கிடம்மா
மோதவரும் தீமைகளை நிலைகுலையச் செய்துவிட்டு 
மேதினியில் புகழுடனே நாம் வாழ ஏற்ற வழி திறந்திடம்மா
தாயாகவிருந்து இத்தரணியாளும் எங்கள் முத்துமாரியம்மா
தூயமனம் கொண்டோரை உயர்த்தி விட வேண்டுமம்மா
மனவுறுதி கொண்டோராய் எம்மை நீ வாழவிட்டு
நாட்டினிலே உரிமையுடன் தலைநிமிர ஏற்றவழி திறந்திடம்மா
உலகாளும் திருமகளே எங்கள் முத்துமாரியம்மா
பங்கமில்லா நல்வாழ்வு வாழ வழி வேண்டுமம்மா
போட்டி, பொறாமைகளின்றி இணைந்து எம்மை வாழவிட்டு 
வளமுடனே இந்நாட்டில் எமது குலம் வாழ்வதற்கு ஏற்றவழி திறந்திடம்மா.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen