மலையகம்
கண்டி மணிகூண்டு கோபுரம் அருகில் சடலம் ஒன்று மீட்பு
கண்டி நகரில் மணிகூண்டு கோபுரம் அருகில் உள்ள சுரங்கபாதையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு இன்று காலை கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கண்டி – குலுகம்மான பகுதியை சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், அவரின் தலைப்பகுதியில் காயங்கள் காணப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.