...
கண்டிசெய்திகள்மலையகம்

கண்டி மஹியாவை முதியோர் இல்லமொன்றில் 63 பேருக்கு கொவிட் தொற்றுறுதி; மூவர் உயிரிழப்பு.

கண்டி மஹியாவை பகுதியில் உள்ள 63 பேர் தங்கியுள்ள முதியோர் இல்லமொன்றில் கொவிட் தொற்றுக்கு இலக்காகி 3 பேர் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியலாயம் தெரிவித்துள்ளது.

இதில் நேற்று முன்தினம் (15) இருவரும், நேற்றைய தினம் (16) ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் அதில் 47 பேருக்கு தொற்று உறுதிப்படுத்ப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஏனையோருக்கும் தொற்று பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தொற்று ஏற்பட்டுள்ள அநேகமானவர்களுக்கு வேறு நோய்கள் காணப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

Related Articles

Back to top button


Thubinail image
Screen