செய்திகள்

கண்டி, மாத்தளை பகுதிகளில் பெரும்பாலானோர் கைது : காரணம் இதுதான்

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியிலும், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 995 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, மாத்தளை, நிக்கவரெட்டிய பகுதிகளிலேயே பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனிடையே, பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

அநாவசியமாக கொழும்பிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 931 வாகனங்கள் நேற்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

ARRESTED seal watermark with grunge texture. Red vector rubber print of ARRESTED text with retro texture. Text caption is placed between double parallel lines.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com