செய்திகள்

கண்டி மாநகரத்துக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு அபாயம்!

கண்டி மாநகரத்துக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
கண்டி நகர எல்லைக்குள் கடந்த 6 வாரங்களில் சோதனைக்குட்படுத்தப்பட்ட 32 பாடசாலைகளில் 30 பாடசாலைகளில் டெங்கு குடம்பிகள் காணப்பட்டதாக கண்டி பிரதான வைத்திய அதிகாரி பசன் பெரகும் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் கண்டி நகர எல்லையில் 100 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 69 பேர் பாடசாலை மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாநகர எல்லையில் 106 பாடசாலை மாணவர்கள் உட்பட 223 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அதிகளவான டெங்கு நோயாளர்கள் பூவெலிக்கடை, மாபனாவத்துர, அருப்பல, போவல, முல்கம்பொல மற்றும் சுதுஹும்பல பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button