...
செய்திகள்

கண்டி மாநகர்- கட்டுக்கலை அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் 

மலையகத்தின் தலை நகரில் கோயில் கொண்ட விநாயகரே
மனமுருகியுன் பாதம் பற்றுகின்றோம் கேட்டிடைய்யா
நல்லருளை வழங்கியெமைக் காத்தருள வரவேண்டும் 
நலமாகவுன்னடியில் நாம் வாழ வழிதர வேண்டும் 
கண்டி நகர் வீற்றிருக்கும் வல்லவரே விநாயகரே
கவலையின்றி வாழ்வதற்கு கருணை தேடுகின்றோம் கேட்டிடைய்யா
வல்லமை தந்தெம்மை வாழவைக்க வரவேண்டும் 
வளம் பெற்று உன்னடியில் நாம் வாழ வழிதர வேண்டும் 
செல்வ விநாயகரென்ற நாமம் கொண்ட விநாயகரே
சுகம் கொண்டு நாம் வாழ உன்னருளைக் கோருகின்றோம் கேட்டிடைய்யா
தயங்காது அருள் செய்து காத்தருள வரவேண்டும் 
அமைதியுடன் உன்னடியில் நாம் வாழ வழிதர வேண்டும் 
மலைசூழ்ந்த வளநிலத்தில் வந்தமர்ந்த விநாயகரே
மனக்கவலையண்டாத நிலையை நாம் கோருகின்றோம் கேட்டிடைய்யா
நேர்மையுடன் உன்னருளால் எம்மை வாழவைக்க வரவேண்டும் 
தவறில்லா நன்நெறியில் உன்னடியில் நாம் வாழ வழிதர வேண்டும் 
அன்னையையும் திருவுருவில் இணையாகக் கொண்டவனின் திருமகனே விநாயகரே
அகிலமெங்கும் அமைதி நிலைக்கக் கோருகின்றோம் கேட்டிடைய்யா
நம்வாழ்வு உயர்வு பெற வழிகாட்ட வரவேண்டும் 
நித்தமும் உன்னடியில் நாம் வாழ வழிதர வேண்டும் 
தேரேறிப் பவனிவந்து அருள் பொழியும் விநாயகரே
தோல்வியண்டா நிறைவாழ்வைத் தருமாறு கோருகின்றோம் கேட்டிடைய்யா
ஆற்றலுடன் சீர்மையுடன் வாழ வழிகாட்ட வரவேண்டும் 
அனைத்து நலன் பெற்று உன்னடியில் நாம் வாழ வழிதர வேண்டும். 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen