
கண்டி மற்றும் அக்குரணை பகுதிகளில் சில பாடசாலைகள் எதிர்வரும் டிசெம்பர் 11
ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகள் மற்றும் அக்குரணை
பகுதியில் உள்ள 5 பாடசாலைகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வைரஸ்
பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.