...
செய்திகள்

கண்டி- வத்தேகம அருள்மிகு ஸ்ரீ கண்கண்ட விநாயகர் திருக்கோயில்

 
சங்கரனார் திருமகனாம் வேழமுக விநாயகர் 
சர்வலோக நாயகனாய் திகழ்கின்ற பெருமனத்தோன் 
சித்திகள் வழங்கி சீர்மைமிகு வழிகாட்டி 
நத்திவரும் துன்பங்களை அடியோடு போக்கிடுவான்.. 
கண்டி மாவட்டத்திலிருந்தருளும் விநாயகர் 
கவலைகளைப் போக்கிவிடும் பெருமை கொண்ட பெருமனத்தோன்
உள்ளத்தில் உயர்வுதந்து உயர்த்தியெம்மை வைத்துவிட்டு 
துன்பநிலை இல்லாத பெருவாழ்வை எமக்களிப்பார். 
வத்தேகம நன்நகரில் வந்தமர்ந்த விநாயகர் 
நலங் கொண்ட பெருவாழ்வை வழங்குகின்ற பெருமனத்தோன் 
வாழ்விடத்தில் நிம்மதியாய் வாழ நம்மை வைத்துவிட்டு 
வாட்டமில்லா மனதுடனே வாழவழி செய்திடுவாய்.. 
மலைசூழ்ந்த திருவிடத்தில் எமைக்காக்க வந்தமர்ந்த விநாயகர் 
மறமழித்து அறங்காக்கும் ஆற்றல் கொண்ட பெருமனத்தோன் 
மனமகிழ்ச்சி நிறைந்திடவே வாழ நம்மை வாழச் செய்து 
மனவுறுதி கொண்டவராய் எமைத் திகழச் செய்திடுவாய்.. 
வனப்புமிகு கோயில் கொண்டு குடியமர்த்த விநாயகர் 
வருந்தி வழிபடுவோர் நலங்காக்கும் பெருமனத்தோன் 
ஏழ்மை நிலையகற்றியுயர் நிலையில் வாழவைத்து
ஏற்றமிகு நல்வாழ்வை நாமடையச் செய்திடுவாய்.. 
கண்கண்ட விநாயகர் என்ற பெயர் கொண்ட விநாயகர் 
எங்குமுறைந்து ஏற்றம்தரும் பெருமனத்தோன் 
ஒன்றுபட்டு ஒற்றுமையாய் நாம் வாழச் செய்து 
நம்பிக்கையுடன் நாம் பலமடையச் செய்திடுவார்.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen