...
செய்திகள்

கண்டி- வத்தேகம- அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில்

அருள்மழை பொழிந்து வளம்பல பெருக்கும் அன்னை முத்துமாரி 
மலைவளம் சூழ்ந்த கண்டி மாவட்டத்தில் கோயில்கொண்டாளே
வளம்பெற நன்மைகள் பல நம்மை நாடிவருவது
உறுதியென்று நம்பி அவளடி என்றும் தொழுவோமே நாம்.. 
துன்பங்கள் துடைப்பாள், துயரங்கள் அழிப்பாள் துணிவையும் தருவாள் அன்னை முத்துமாரி 
மலைநகரான வத்தேகமத்தில் அருள்முக அன்னை வளம்பெற வந்தமர்ந்தாளே
இனியெந்த இடரும் எமக்கில்லை நிச்சயமென்று
மனமகிழ்வுடனே நம்பி அவளடி என்றும் தொழுவோமே நாம்
தாய்மனங்கொண்டு தரணியைக்காத்து அருள் வெள்ளம் பெருக்கும் அன்னை முத்துமாரி 
பகையில்லாத பண்பட்ட வாழ்வுவழங்கவே இம் மலைநகரிலே குடியமர்ந்தாளே 
வல்லமை தந்தெங்கும் நிம்மதி நிலைபெறும்
திடமென்று நம்பி அவளடி என்றும் தொழுவோமே நாம் 
வரம் நாடி வருவோர்க்கு வாழ நல்வழிகாட்டிடும் அன்னை முத்துமாரி 
வருகின்ற நன்மைகளை வாரியே வழங்கிவிட இப்பதியில் இருந்தமர்ந்தாளே
எப்பொழுதும் இவளருளால் நிம்மதியை நாமடைய
ஏற்றவழி காட்டிடுவாள்
நம்பி அவளடி என்றும்  தொழுவோமே நாம்
வழுவில்லா நல்வாழ்வு நமக்கருள வந்தமர்ந்த அன்னை முத்துமாரி 
வாழ்வில் நலம் வழங்க நல்லாட்சி உறுதி செய்ய உறுதி கொண்டு உறைந்துவிட்டாள் இத்தலத்தில்
குவலயத்தில் குன்றாத குதூகலத்துக்குரிமை கொண்டு நாம் திகழ
உரிய விதியமைந்து வழியமையும் உறுதியென்று நம்பி அவளடி என்றும் தொழுவோமே நாம்
கொடியபகை, கொடுமைகளைக் கூண்டோடு அழித்துவிட வந்தவளே அன்னை முத்துமாரி 
நம்பித் தொழும் எங்களுக்கு நலமளித்து அருளளிக்க இங்கு வந்து அமர்ந்தவளே
என்றுமினி அச்சமில்லை, அவதியில்லை நிம்மதியே நமக்குண்டு
நிரந்தரமே அதுவென்று நம்பி அவளடி என்றும் தொழுவோமே நாம்.
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen