Breaking Newsகண்டிசெய்திகள்மலையகம்

கண்டி – ஹுன்னஸ்கிரிய பகுதியில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; 5 பேர் வைத்தியசாலையில்!

கண்டி – ஹுன்னஸ்கிரிய பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீமுரே – லுல்வத்த பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் தெல்தெனிய வைத்தியசாலைக்கும், மேலும் சிலர் மெதமஹநுவர பிரதேச வைத்தியசாலைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மெதமஹநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Articles

Back to top button