செய்திகள்

கதிர்காமம்- செல்லக் கதிர்காமம் அருள்மிகு பிள்ளையார் திருக்கோயில் 

கதிர்காமத் திருத்தலத்தில் கோயில் கொண்ட பிள்ளையாரே
கதிநீயே கருணை செய்து காத்தருள்வாய் பெருமானே
வலிந்து வரும் வேதனைகள் வலுவிழந்து நீங்கிவிட
காவல் செய்து காத்திடுவாய் எங்கள்  செல்லப் பிள்ளையாரே
பெருகிவரும் மாணிக்க கங்கை கரையிலே வீற்றிருக்கும் பிள்ளையாரே
பேதலித்து நிற்பவர்கள் மனக்கவலை போக்கிடுவாய் பெருமானே
மாண்புடனே நாம்வாழ வலிமை தந்து அரவணைத்து
திடமாக நிமிர்ந்து நிற்க வழிகாட்டிடுவாய் எங்கள் செல்லப் பிள்ளையாரே
இயற்கை அழகு பொங்கும் இனிமை தரும் சூழலிலே காட்சி தரும் பிள்ளையாரே
இடர்களைந்து நாம்வாழ உடனிருப்பாய் பெருமானே
மகிழ்வுடனே வாழ்வதற்கு வலிமை தந்து காப்பளித்து
ஆறுதலைத் தந்திடுவாய் எங்கள் செல்லப் பிள்ளையாரே
தம்பி திருமுருகன் உடனுறையும் பிள்ளையாரே
தர்மம் நிலைபெற்று நிம்மதி நிலைக்கச் செய்வாய் பெருமானே
நாடு நலன் பெறவும், நம்மவர்கள் உயர்ந்திடவும்
அருள் தந்து ஆதரிப்பாய் எங்கள் செல்லப் பிள்ளையாரே
புனிதமிகு நற்பதியில் செல்ல கதிர்காமத்தில் குடிகொண்ட பிள்ளையாரே
மனதினிலே மகிழ்ச்சி பொங்கி நிலைக்கச் செய்வாய் பெருமானே
வளங்கொண்டு நிம்மதியும் உடன் கொண்டு நாம் வாழ்ந்திடவும்
உடனிருந்து காப்பளிப்பாய் எங்கள் செல்லப் பிள்ளையாரே
நம்பிவரும் பக்தர்களின் நலன் காக்கும் பிள்ளையாரே
நாம் படும் வேதனைகள் துடைத்தெறிவாய் பெருமானே
இந்நாட்டில் நாங்கள் சமத்துவமாய் வாழ்வதற்கு வழியமைத்து காத்து நெறிப்படுத்துவாய் எங்கள் செல்லப் பிள்ளையாரே.
ஆக்கம்- த.மனோகரன். 
துணைத் தலைவர், 
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button