சமூகம்
கத்திக்குத்துக்கு இலக்கான பிரபல சிங்கள நடிகர்

நுகேகொடை ஏழாம் தூண் பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றில் வைத்து பிரபல சிங்கள நடிகர் திலக் ஜயவீர கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், கத்திகுத்துக்கு இலக்கான நடிகர் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்றைய தினம் அதிகாலை இரவு விடுதிக்குள் வந்த குழுவினர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் , சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளானவர் 58 வயதுடைய திலக் ஜயவீர பல சிங்கள திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சம்பவம் குறித்து மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.