செய்திகள்மலையகம்

கந்தப்பளையில் அதிகரிகிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

நுவரெலியா பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட கந்தப்பளை பிரதேசத்தில், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக, பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் டப்ளியூ. அமில தெரிவித்தார்.

நேற்று (30) மாலை, 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், கந்தப்பளை – ஆறாம் கட்டை பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வீடு ஒன்றில் வசித்த வந்த 81 வயதுடைய பெண் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உயிரிழந்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

மேலும், கந்தப்பளை நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல்பொருள் அங்காடி நிலையத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்தோர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதணையில் 14 பேருக்கு, நேற்று (30) மாலை தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், நுவரெலியா ஆடைதொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பார்க் தோட்டப்பகுதி பெண் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில், அவரின் குடும்பத்தில் ஐவர் தனிமைப்படுத்தப்பட்ட முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஐவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இவ்வாறு, 19 தொற்றாளர்கள் ஒரேநாளில் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஆகையால், கந்தப்பளையில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பிரதேச மக்கள் அவதானம் பேணி சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடந்துகொள்ள வேண்டும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்

Related Articles

Back to top button