செய்திகள்நுவரெலியாமலையகம்

கந்தப்பளை பாக் தோட்ட தொழிலாளர்கள் கைது தொடர்பில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி கண்டிப்பு.

நுவரெலியா கந்தப்பளை பாக் தோட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டமையை புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த பலவருடங்களாக பாக் தோட்டத்தில் சர்வாதிகாரி போல் செயற்பட்டு வரும் தோட்ட அதிகாரியை வெளியேற்றுமாறு தொழிலாளர்கள் போராடி வருகின்றார்கள்.

ஆனால் கம்பனி நிர்வாகம் தொழிலாளர்களை நசுக்கி தனக்கு கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து தரும் தோட்ட அதிகாரிக்கு சார்பாகவே நடந்து வருகின்றது.

மேற்படி தோட்ட அதிகாரி தொழில் ரிதியாக தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை பிரயோகித்து வருவது மாத்திரமல்லாமல் தோட்ட மக்களுக்கு கிடைக்கும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் தடுத்து வந்துள்ளார்.

பல தடவைகள் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் தனது அராஐகத்துக்கு அடிபணியாத தொழிலாளர்களுக்கு எதிராக பொலிசாரை தூண்டி பொய் குற்றசாட்டுகளை சுமத்தி கைது செய்து சிறையில் அடைக்க செய்துள்ளார் இவ்வாறு சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் தோட்ட அதிகாரி உடணடியாக வெளியேற்றப்பட வேண்டும் என எமது கட்சி வழியுறுத்துகின்றது.

தொடர்ந்தும் அநீதிக்கு எதிராக போராடும் தொழிலாளிகளின் போராட்டத்தை அதிரிப்பதோடு அம்மக்கள் சார்பாக தொடர்தும் போராடும் என தெரிவித்தார்.

– ஆறுமுகம் ரமேஸ்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com