மலையகம்

கந்தப்பளை யோகேந்திரனின் “எங்கள் தோட்டம்” நூல் வெளிவந்தது

கந்தப்பளை இந்து இளைஞர் மன்றத்தின் ஆதரவோடும் தாமரை கழகத்தின் பங்களிப்போடு எங்கள் தோட்டம் நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (5.05.2018 அன்று) பிரமாண்டமாக கந்தப்பளை சித்தி விநாயகர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

தேசிய விருது பெற்ற எழுத்தாளரும் ,ஊடகவியலாளரும், ஆசிரியருமான கந்தப்பளை தாமரை யோகாவின் மலையக கலாசார வரலாற்று பண்பாட்டு அம்சங்களை மண்வாசனையோடு சுமந்துவரும் ” எங்கள் தோட்டம் என்ற ” நூல் வெளியீட்டு விழா மூத்த எழுத்தாளர் திரு .மரியதாஸ் தலைமையில் இடம்பெற்றது.

கந்தப்பளை மண்ணிலிருந்து உதயமான முதலாவது நூலான எங்கள் தோட்டம் நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதிகனகராஜ், மற்றும் நுவரெலிய பிரதேசசபையின் தவிசாளர் , வேலு.யோகராஜ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான தமிழ்செல்வன் இராமஜெயம் .,முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் சோமசுந்தரம்,பிரைட் நிறுவன பணிப்பாளர் பிரபாகரன்,ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாதன்,இலக்கிய ஆய்வாளர்களான மரியதாஸ்,இலட்சுமணன்,கலாபூசனம் மொழிவரதன்,கவிஞர் பன்னீர்.,நாடக கலைஞர் காளிதாஸ்.,நாட்டாரியல் கலைஞர் விமலநாதன்.,வெளிபாடசாலையின் அதிபர்கள்,ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்ள் என பலரும் கலந்து கொண்டனர் .

இந்த நிகழ்வின் போது எங்கள் தோட்டம் என்ற நூலின் அறிமுகவுரையை ஞானசேகரன் அவர்களாலும் நூல் வெளியீடுபவராக தமிழ் ஆசான் குணா அவர்களாலும் முதல் பிரதியை விஷேட அதிதியாக கலந்து கொண்ட நானுஒயா டெஸ்போட் தமிழ் வித்தியாலயத்தின் அதிபரும் பண்முக திறன் கொண்ட திரு.யோகேஸ்வரன் திருகரங்களுக்கு வழங்கி வைக்கபட்டமை குறிப்பிடதக்கது.நூல் விமர்சனத்தை ஆசான் இராமர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

அத்தோடு கலைநிகழ்ச்சிகளை கந்தப்பளை மெதடிஸ் கல்லூரியின் மாணவர்களாலும் அதனை நெறியாள்கையினை நடன கலாமணி ஆசிரியர் ராமேஸ்காந் அவர்களலால் முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button