செய்திகள்

கந்தப்பளை ஸ்ரீ விசுந்தாராமய விகாரைக்கு பாதுகாப்பு மதில் சுவருக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மறைந்த முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட கந்தப்பளை கல்பாலம ஸ்ரீ விசுந்தாராமய விகாரைக்கு வருகை தந்து விகாராதிபதியின் ஆசிகளைப் பெற்று விகாரைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதாக கூறியதன் நிமித்தம் தற்போது அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட ரூபாய் 500,000 நிதி ஒதுக்கீட்டின் கீழ் விகாரைக்கான பாதுகாப்பு மதில் சுவர் அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது விகாரையின் ஏனைய மத குருமார்களும், நுவரெலியா பிரதேச சபையின் உப தலைவர் சரத் அவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen