செய்திகள்

கந்தலோயா மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியும் வீதி நாடகமும்…

 
 
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி ஹிஷாலினியின்  மரணத்திற்கு நீதிகோரி எட்டியாந்தோட்டை கந்தலோயா தோட்டத்தில் பாடசாலை மாணவர்களினால் ஆர்ப்பாட்டப் பேரணியும், வீதி நாடகமும் நடத்தப்பட்டது.
 
 
 
கந்தலோயா தமிழ் மகா வித்தியாலய மாணவர்களும், கிழக்கு,யாழ் , தென்கிழக்கு , திருகோணமலை வளாகம் கிழக்கு ,பேராதனிய பல்கலைகழகளகங்களில் பயிலும் மாணவர்களினதும் ஏற்பாட்டில் இந்த பேரணியும், வீதி நாடகமும் நடத்தப்பட்டது.
 
 
இதன்போது அவர்கள் ஹிஷாலினி எவ்வாறான துன்பங்களை எதிர் நோக்கினாள் என்பதினை எடுத்துக்காட்டும் முகமாக வீதி நாடகத்தை அரங்கேற்றி இருந்தனர்.
 
ஆர்ப்பாட்டத்தில் பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் அந்த பாடசாலையில் இருந்து கல்வி கற்றுப் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள் உட்பட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
 
 
 

Related Articles

Back to top button
image download